search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறாவளி காற்றுடன் கனமழை"

    செம்பனார்கோவிலில் நேற்று முன் தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல ஏக்கர் நிலம, திடல்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டு விவசாயம் செய்துவந்தனர். ஆறுபாதி மெயின்ரோடு செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகே வாழை விவசாயம் செய்து வந்த சுப்பையா நாலரை ஏக்கர், பால்ராஜ் ஒரு ஏக்கர் திடல் மற்றும் நிலத்தில் வாழை விவசாயம் செய்துவந்தனர். அது தற்போது தார்போட்டு பிஞ்சும் பூவுமாக இருந்தது. இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததில் முற்றிலும் முறிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனை வி.ஏ.ஓ. தேவேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் கூறியதாவது:- நாங்கள் இந்த வாழையை வளர்க்க 24 மணிநேரத்தில் நான்கு மணி நேரம் தான் தூங்டுவோம். மீதம் 20 மணி நேரம் இந்த வாழை கொல்லையிலேயே இருந்து பராமரித்துவந்தோம். இதில் பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். சுமார் ஒன்றரை மணிநேரம் காற்றுடன் கன மழை பெய்ததால் வாழை தாருடன் மரங்கள் முறிந்து அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டரும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் எங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×